நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், எருமாபாளையம் பனங்காட்டை சேர்ந்தவர் லோகேஸ்-வரன், 32. சீலநாயக்கன்பட்டியில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 3ல் வேலைக்கு சென்ற அவர், 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கை, கடை முன் நிறுத்தியிருந்தார். மாலையில் வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.
இதுகுறித்து லோகேஸ்வரன் நேற்று முன்தினம் அளித்த புகார்-படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல், அஸ்தம்பட்டி அண்ணா பூங்காவில் உள்ள பிரியாணி கடையில் மேலாளராக பணிபுரியும் சூர்யபிரகாஷ், 35, அவரது ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை, கடந்த, 7ல் கடை முன் நிறுத்தியி-ருந்த நிலையில் காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.