/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாட்டு தீவனமாக மாறிய பீர்க்கங்காய்
/
மாட்டு தீவனமாக மாறிய பீர்க்கங்காய்
ADDED : செப் 23, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: கொளத்துார் ஒன்றியத்தில், 14 ஊராட்சிகளில், 20 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் விவசாயிகள் பீர்க்கங்காய் சாகுபடி செய்-துள்ளனர். 4 முதல், 5 மாத காய்களை அறுவடை செய்யலாம்.
சில வாரங்களாக விவசாயிகள் பீர்க்கங்காய்களை அறுவடை செய்து வியாபாரிகளுக்கு விற்றனர்.
நேற்று மேட்டூர் உழவர் சந்தையில் கிலோ பீர்க்கங்காய், 25 ரூபாய்க்கு விற்பனையானது.
ஆனால் விவசாயிகளிடம், வியாபாரிகள் அதிகபட்சம், 10 ரூபாய்க்கு காய்களை கொள்முதல் செய்கின்றனர். இதனால் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.
சில விவசாயிகள், சாகுபடி செய்த பீர்க்கங்காய்களை விற்காமல் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு தீவனமான வழங்குகின்-றனர்.