ADDED : அக் 31, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
சேலம்:பா.ஜ., தேசிய சிறுபான்மை பிரிவு மாநில செயலர் இப்ராஹிம். இவர் நேற்று சேலம் வந்த நிலையில், அன்னதானப்பட்டியில் உள்ள பள்ளி
வாசலில்
தொழுகை நடத்த செல்வதாக அறிவித்தார். இந்நிலையில் அவரை பள்ளி
வாசலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என, ஐ.யு.எம்.எல்., கட்சி நிர்வாகிகள்
கூறினார்.
இதனால் மோதல் ஏற்படக்கூடாது என்பதால், சூரமங்கலத்தில் தங்கி இருந்த இப்ராஹிமிடம், அப்பகுதி போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது இப்ராஹிம்,
'பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு செல்வேன். ஐ.யு.எம்.எல்., நிர்வாகிகள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முறையிட்டார். ஆனால், போலீசார்
அனுமதிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தொழுகை நேரம் வந்ததால்,
அப்பகுதியில் உள்ள சாலையிலேயே தொழுகையில் ஈடுபட்டார்.
