ADDED : பிப் 28, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் சட்டசபை தொகுதி, பா.ஜ., அலுவலக திறப்பு விழா, நேற்று நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமை வகித்தார். அதில், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராமலிங்கம் பேசியதாவது: மூன்றாம் மொழி கற்கும் வாய்ப்பு குறித்து மக்களிடம் பரப்ப வேண்டும். எல்லாரும் வேண்டாம் என்கின்றனர். நாம் வேண்டும் என்கிறோம். வேண்டும் என்போர் நம்மை ஆதரிக்கட்டும். தெய்வீகமும், தேசியமும் தான் பா.ஜ.,வின் கொள்கை. நம் இயக்கம் வலுவாக இருக்க வேண்டும் என்றால், நாம் வலுவாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட முன்னாள் தலைவர் சுதிர்முருகன், துணைத்தலைவர் ரவி பங்கேற்றனர்.

