ADDED : செப் 10, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, வரும், 17ல் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, வாழப்பாடியில் உள்ள சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். நெசவாளர் பிரிவு மாநில தலைவர் அண்ணாதுரை பேசினார்.
அதில் பிரதமர் மோடி பிறந்தநாளில், கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்குதல்; 18ல் சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள, 23 ஒன்றியங்களில் ரத்த தான முகாம் நடத்தல்; துாய்மை பணி மேற்கொள்ளுதல்; 19ல் இலவச மருத்துவ முகாம் நடத்தல், மரக்கன்றுதல் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், பொதுச் செயலர்கள் சுந்தரமூர்த்தி, ராஜேந்திரன், ருத்ரம்மாள், 69 பொறுப்பாளர்கள் உள்ளிட்ட
நிர்வாகிகள் பங்கேற்றனர்.