/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காடு வனப்பகுதியில் வாலிபர் சடலம் மீட்பு
/
ஏற்காடு வனப்பகுதியில் வாலிபர் சடலம் மீட்பு
ADDED : ஆக 13, 2025 05:36 AM
ஏற்காடு: இளம்பிள்ளை, நடுத்தெருவை சேர்ந்தவர் சப்தகிரி, 44. நேற்று முன்தினம் முதல் காணவில்லை என, அவரது பெரியப்பா சீனி-வாசனின் மகன் கருணாமூர்த்தி உள்ளிட்ட உறவினர்கள் தேடினர்.
அவரது மொபைல் போன் சிக்னலை வைத்து, சேலம், கோரி-மேட்டில் தேடினர். தொடர்ந்து ஏற்காடு மலைப்பாதையில் தேடி-யபோது, 60 அடி பாலம் அருகே, 2 கி.மீ., தொலைவில் சாலை-யோர வனப்பகுதியில், அவர் இறந்து கிடந்தது தெரிந்தது. இதை-யறிந்து, ஏற்காடு போலீசார், சடலத்தை கைப்பற்றி, கருணாமூர்த்-தியிடம் விசாரித்தனர்.போலீசார் கூறியதாவது: சப்தகிரிக்கு திருமணமாகவில்லை. சில ஆண்டுக்கு முன் ஷேர் மார்க்கெட்டில் பணம் போட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அப்போது முதல், சற்று மனநலம் பாதிக்கப்பட்டி-ருந்தார். நேற்று காலை, ஏற்காடு சென்று தற்கொலை செய்து கொள்வதாக கூறிச்சென்ற நிலையில், உறவினர்கள் தேடி வந்த-போது, இறந்து கிடந்துள்ளார். அருகே கிடந்த பையை சோதனை செய்ததில் இரு கத்தி, எலி, பூச்சிக்கொல்லி மருந்துகள், தின்னர், மொபைல் போன், ஆதார், ஓட்டுனர் உரிமம், பணம் இருந்தன. தற்கொலையா என விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.