/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அணை கால்வாயில் மூழ்கிய வாலிபர் சடலம் ஒரு நாளுக்கு பின்பு மீட்பு
/
அணை கால்வாயில் மூழ்கிய வாலிபர் சடலம் ஒரு நாளுக்கு பின்பு மீட்பு
அணை கால்வாயில் மூழ்கிய வாலிபர் சடலம் ஒரு நாளுக்கு பின்பு மீட்பு
அணை கால்வாயில் மூழ்கிய வாலிபர் சடலம் ஒரு நாளுக்கு பின்பு மீட்பு
ADDED : ஜூலை 15, 2025 01:01 AM
மேட்டூர் :மேட்டூர் கால்வாயில் மூழ்கிய வாலிபர் சடலம், ஒரு நாளுக்கு பின்பு நேற்று மாலை மீட்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த மஞ்சினியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயகுமார் மகன், பார்சல் சர்வீஸ் எடையாளர் சாரதி, 22. நேற்று முன்தினம் சாரதி, அவரது நண்பர்கள் மேட்டூர் அணையை சுற்றி பார்க்க சென்றனர். நீச்சல் தெரிந்த சாரதி, அவரது நண்பர்கள் நேற்று முன்தினம் மதியம் மேட்டூர் அணை அடிவாரம் கிழக்கு, மேற்கு கால்வாயில் நீச்சல் அடித்து குளித்தனர்.
அப்போது சாரதி கால்வாயின் ஒரு கரையில் இருந்து, மறுகரைக்கு நீச்சல் அடித்து சென்றார். அடிக்கடி அவ்வாறு சென்றதால் உடல் பலவீனமடைந்து நீரில் இழுத்து செல்லப்பட்டார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி வரை அவரது உடலை மேட்டூர் தீயணைப்பு குழுவினர் தேடியும் கண்டு
பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று காலை, 7:00 மணிக்கு மீண்டும் மீட்பு பணி துவங்கியது.
மேட்டூர், நங்கவள்ளி தீயணைப்பு குழுவினர், 30 பேர் பரிசலில் சென்று வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவரது உறவினர்கள் நேற்று மதியம், 2:00 மணிக்கு கால்வாயில் நீரை நிறுத்தி கண்டுபிடிக்க கோரி, கொளத்துார் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் கூறியதால் கலைந்து சென்றனர்.
நேற்று மாலை, 5:00 மணியளவில் கால்வாயில் சிறிது தண்ணீர் குறைக்கப்பட்டது. அப்போது வாலிபர் சடலம் நீச்சல் அடித்த படித்துறையில் இருந்து, சிறிது துாரத்தில் நீருக்குள் மூழ்கி இருந்தது தெரியவந்தது.
சடலத்தை மேட்டூர் தீயணைப்பு குழுவினர் மீட்டு, பரிசோதனைக்கு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 12:00 மணி நேர போராட்டத்துக்கு பின்பு, வாலிபர் சடலம் மீட்கப்பட்டது குறித்து, மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.