ADDED : நவ 28, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்:சேலம் விமான நிலையத்தில் வெடிபொருள் செயலிழப்பு ஒத்திகை நேற்று நடந்தது. விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத் தலைமை வகித்தார்.
அதில்
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், ஒரு பையில் வெடிகுண்டுடன் கூடிய
பையை கண்டறிவது போன்றும், உடனே பயணியர், ஊழியர்களை பாதுகாப்பாக
வெளியேற்றும் போன்றும் செய்து காட்டினர்.
தொடர்ந்து வெடிகுண்டை
அதிநவீன பாதுகாப்பு கொண்ட பெட்டியில் வைத்து, திறந்தவெளிக்கு
கொண்டு சென்று செயலிழக்க செய்து ஒத்திகை அளித்தனர்.
