/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
3 கடைகளில் திருடிய சிறுவன் சிக்கினான்
/
3 கடைகளில் திருடிய சிறுவன் சிக்கினான்
ADDED : ஆக 23, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், இரும்பாலை அருகே சித்தனுாரை சேர்ந்தவர் மனோகரன், 38. சித்தனுார் பஸ் ஸ்டாப் அருகே ஓட்டல் நடத்துகிறார். கடந்த, 8 இரவு, இவரது ஓட்டலில், 10,000 ரூபாய் திருடு
போனது. அருகில் உள்ள இரு சிமென்ட் கடைகளில், 7,250 ரூபாய் திருடுபோனது.
மனோகர் புகார்படி இரும்பாலை போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த பின், அழகாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, 17 வயது சிறுவனை, நேற்று கைது செய்து, சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.