ADDED : நவ 09, 2026 12:49 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டியை சேர்ந்த, 15 வயது சிறுவன் இவர் கேரளா மாநிலத்தில் வசித்து வரும் நிலையில், தீபாவளிக்காக, சொந்த ஊரான வேப்பிலைப்பட்டிக்கு இரு நாட்களுக்கு முன் வந்தார்.
நேற்று மதியம், 2:00 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி காசி, 35. என்பருடன் அமர்ந்து, மது அருந்தி கொண்டிருந்தார்.அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன், அருகில் இருந்த அரிவாளால் காசியை வெட்டினார். படுகாயமடைந்த காசியை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வாழப்பாடி போலீசார் சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
