sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த லஞ்சம் தாசில்தார் வீடு, ஆபீசில் 9 மணி நேரம் சோதனை

/

ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த லஞ்சம் தாசில்தார் வீடு, ஆபீசில் 9 மணி நேரம் சோதனை

ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த லஞ்சம் தாசில்தார் வீடு, ஆபீசில் 9 மணி நேரம் சோதனை

ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த லஞ்சம் தாசில்தார் வீடு, ஆபீசில் 9 மணி நேரம் சோதனை


ADDED : ஜன 31, 2025 02:17 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி:நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது செய்யப்பட்டு, அவரது அலுவலகம், வீடு ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார், 9 மணி நேரம் சோதனை நடத்தினர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, 2003ல், அனைத்து கலெக்டர்களுக்கும், வருவாய்த்துறை உத்தரவிட்டிருந்தது. அதேபோல், 2005ல், சென்னை உயர்நீதிமன்றம், 'நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்க வேண்டும்' என, அரசுக்கு உத்தரவிட்டது.

சட்டம்


இதனால், 2007ல், தமிழக அரசு, 'குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டம்' கொண்டு வந்தது.

நீர்த்தேக்க எல்லை எது என்பதை, வருவாய் துறை ஆவணங்களை வைத்து, 'சர்வே' அதிகாரி நிர்ணயிப்பார். இப்பணி முடிந்ததும், வரைபடம், பதிவேடு தயாரித்து, பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஆக்கிரமிப்பை, ஆக்கிரமிப்பாளரே அகற்றவில்லை என்றால், அதிகாரிகள் அகற்ற வேண்டும்; அதற்கு போலீஸ் உதவியை பெறலாம். அதற்கு ஆகும் செலவை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலிக்கலாம்.

அவர்களுக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கலாம் என அந்த சட்டம் சொல்கிறது. ஆனாலும், அந்த உத்தரவை அமல்படுத்த தாமதம் செய்வது; 'கவனிப்பு' பெறுவது தொடர்கிறது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை சேர்ந்த மஞ்சுளா, தன் வயலை ஒட்டிய நீரோடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய், பொதுப்பணி துறையினரிடம் பலமுறை மனு கொடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

உத்தரவு


இதனால் அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், நீரோடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சேலம் கலெக்டர், கெங்கவல்லி தாசில்தார், நீர்வளத்துறை அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிட்டது.

கோர்ட் உத்தரவிட்ட பிறகும், ஆக்கிரமிப்பை அகற்ற எந்த துறை அதிகாரியும் அக்கறை காட்டவில்லை. கோர்ட் உத்தரவின் நகலுடன் கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன், 38, என்பவரை பார்த்து முறையிட்டார் மஞ்சுளா.

அவரை அலைக்கழித்த பிறகு, '5 லட்சம் ரூபாய் கொடுத்தால் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கிறேன்' என்று தாசில்தார் பேரம் பேசினார். வேறு வழியில்லாத நிலையில் மஞ்சுளா அதற்கு சம்மதித்தார்.

உடனே, ஐந்து லட்சம் புரட்ட முடியாது என்று அவர் சொன்னதால், தாசில்தார் ஒரு சலுகை அறிவித்தார். 'சரி, அட்வான்ஸ் தொகையாக ஒரு ௧௦,௦௦௦ மட்டும் இப்போது கொடு; மீதியை பிறகு வாங்கி கொள்கிறேன்' என்றார்.

அமாவாசை


'ஒரு நிபந்தனை: நிறைந்த தை அமாவாசை நாளில் முன் பணம் கொடுத்துவிட வேண்டும்' என கூறியுள்ளார்.

மஞ்சுளா மனதுக்குள் ஒரு முடிவோடு தலையாட்டினார். வெளியே வந்ததும், நேராக, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகம் சென்று நடந்ததை சொன்னார்.

அவர்கள் பணம் ரெடி செய்து, மஞ்சுளாவிடம் கொடுத்தனர். அமாவாசை தினம் மதியம், 3:00 மணிக்கு பணத்தை மஞ்சுளாவிடம் இருந்து தாசில்தார் புன்னகையோடு வாங்கியபோது, மாறு வேடத்தில் ஆங்காங்கே நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவரது அலுவலகம், தியாகனுாரில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் நள்ளிரவு 12:30 மணி வரை சோதனை நடத்தினர். ஓடை ஆக்கிரமிப்பு தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பின் பாலகிருஷ்ணனை, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க, ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவிக்கு அறிக்கை வழங்கியுள்ளார்.

-போலீஸ் மட்டுமா குற்றவாளி?


'கோர்ட் உத்தரவுகளை போலீஸ் அமல்படுத்துவது இல்லை' என்று, ஐகோர்ட் நேற்று அதிருப்தி தெரிவித்தது.போலீஸ் அலட்சியமாக நடந்து கொள்வது, அந்த துறைக்கு பொறுப்பான உள்துறை செயலருக்கு தெரியுமா, தெரியாதா என்றும் நீதிபதி வேதனையுடன் கேட்டிருந்தார். அதிகாரி நீரஜ் குமாரை, இன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவும் பிறப்பித்தார்.
கோர்ட் உத்தரவை நிறைவேற்றாமல் போக்கு காட்டுவது போலீஸ் துறை மட்டுமல்ல என்பது, இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகி இருக்கிறது. தாசில்தார் போன்ற உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் கூட கோர்ட் உத்தரவை நிறைவேற்றாமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகின்றனர் என்பதை காட்டுகிறது.கோர்ட் உத்தரவை மதிக்காத சாமானிய மக்களை கோர்ட் எப்படி நடத்துகிறதோ,
அதே போல, அதிகாரத்தில் உள்ளவர்களையும் நடத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மணல் கொள்ளையில் துவங்கி எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், அதிகார வர்க்கத்தினர் தண்டனைக்கு ஆளாகாமல் தப்புவதையே பார்த்து அவர்கள் சலிப்படைந்துள்ளனர்.








      Dinamalar
      Follow us