/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நதியில் மணல் கடத்தல் மாட்டு வண்டி பறிமுதல்
/
நதியில் மணல் கடத்தல் மாட்டு வண்டி பறிமுதல்
ADDED : ஜூன் 02, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம்,: பெத்தநாயக்கன்பாளையம், காளிசெட்டியூர் வசிஷ்ட நதி ஆற்றில் நேற்று முன்தினம் இரவு, தாசில்தார் ஜெயக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆற்றில் இருந்து மணல் கடத்திக்கொண்டு, மாட்டு வண்டியில் வந்தவர்கள், அதிகாரிகளை பார்த்ததும், வண்டியை விட்டு தப்பி ஓடினர். மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, அதிகாரிகள் விசாரித்ததில், வண்டியை ஓட்டி வந்தவர், சின்னமசமுத்திரத்தை சேர்ந்த புருஷோத்தமன், 55, என தெரிந்தது. அவரை நேற்று பிடித்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.