நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஸ் கண்ணாடி உடைப்பு
நங்கவள்ளி, நவ. 1-
இடைப்பாடி, எருமப்பட்டியை சேர்ந்தவர் வடிவேல், 46. அரசு பஸ் டிரைவரான இவர், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, இடைப்பாடியில் இருந்து பெங்களூருக்கு அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார். நங்கவள்ளி அருகே ஜலகண்டாபுரம் - நங்கவள்ளி சாலையில் வனவாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர், பஸ்சின் வலது புற கண்ணாடி மீது ஒரு பொருளை வீசினார். இதில் கண்ணாடி உடைந்தது. உடனே மர்ம நபர் தப்பிவிட்டார். இதுகுறித்து வடிவேல் புகார்படி நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

