/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடன் தொல்லையால் குடும்பத்துடன் தொழிலதிபர் மாயம்
/
கடன் தொல்லையால் குடும்பத்துடன் தொழிலதிபர் மாயம்
ADDED : ஏப் 24, 2025 01:16 AM
சேலம்:சேலம், அழகாபுரம், சம்பந்தம் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 47. இவர், சேலம் மற்றும் ஓசூரில், இருசக்கர வாகன விற்பனை ஏஜன்சி நடத்தினார்.
இவரது மனைவி பாலஅஸ்வினி, 40. இவர்களது மகன் ஸ்ரீஜெய், 10, மகள் ஜெயஸ்ரீ, 6. இவர்கள், கடந்த, 1ல் குடும்பத்துடன் வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்து அருகில் இருந்தவர்கள், அம்மாபேட்டையில் உள்ள சீனிவாசனின் தந்தை மோகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் புகார்படி, அழகாபுரம் போலீசார் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தொழிலுக்கு சீனிவாசன் நண்பர்கள் உள்பட பலரிடம் கடன் பெற்றதாக தெரிகிறது. இதை திருப்பி செலுத்த முடியாத நிலையில், கடந்த ஆண்டு சீனிவாசன் தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது குடும்பத்தினர் காப்பாற்றினர். தற்போது அவரது சொத்துகளை விற்று, 35 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு, சீனிவாசன் குடும்பத்துடன் வெளியே சென்றது தெரியவந்துள்ளது. மாயமான குடும்பத்தினரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.