/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளி கொலுசு உற்பத்தி செய்வோருக்கு அழைப்பு
/
வெள்ளி கொலுசு உற்பத்தி செய்வோருக்கு அழைப்பு
ADDED : ஜூலை 03, 2025 02:21 AM
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
அரியாகவுண்டம்பட்டியில், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் தொழில் தொடங்க ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளுடன், 102 தொழில் கூடங்களுடன் கூடிய அடுக்குமாடி தொழில் வளாகம், சிட்கோ மூலம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு தொழில்முனைவோருக்கு முழு கிரைய விற்பனை முறை மற்றும் தவணை முறை விற்பனை அடிப்படையில் தொழிற்கூடம்
ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
அதனால் வெள்ளி கொலுசு உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முனைவோர், http://www.tansidco.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். மேலும் கூடுதல் தகவலுக்கு, 'கிளை மேலாளர் எஸ்.சத்தியமூர்த்தி, சிட்கோ தொழிற்பேட்டை, 5 ரோடு, சேலம் - 636 004' என்ற முகவரி, 94450 - 06571 என்ற மொபைல் எண்ணில் பேசலாம். அத்துடன், bmslm@tansidco.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பயன்பெறலாம்.