தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாற்றுப்பயிர் திட்டம் மானியம் பெற அழைப்பு

மாற்றுப்பயிர் திட்டம் மானியம் பெற அழைப்பு

மாற்றுப்பயிர் திட்டம் மானியம் பெற அழைப்பு


ADDED : அக் 22, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டத்தில், நடப்பாண்டில் சராசரியை விட, 44 சத-வீதம் குறைவான மழை பதிவாகி உள்ளது.

அதனால், வடகி-ழக்கு பருவமழையை பயன்படுத்தி, சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்து பயிர்களை சாகுபடி செய்து, விவசாயிகள் உற்பத்தியை பெருக்க வேளாண்துறை புது திட்டங்களை செயல்படுத்துகிறது.

அதன்படி தமிழ்நாடு சிறு

தானிய இயக்கத்தில் மாற்றுப்பயிர் திட்டத்தில் ஏக்கருக்கு, 1,250 ரூபாய் மானியம்; சான்று விதை உற்பத்திக்கு கிலோவுக்கு, 30 ரூபாய் மானியம்; கேழ்வரகு சாகுபடி விவசாயிகளுக்கு பின்-னேற்பு மானியமாக ஏக்கருக்கு, 1,600 ரூபாய் 100 சதவீத மானி-யத்தில் பெறலாம். மாற்றுப்பயிர் திட்டத்தில் பயறு வகை, எள் விதைகள், 50

சதவீத மானியத்தில் பெறலாம்.

பாரம்பரிய சிறுதானியம், பயறுவகை விதைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், 50 சதவீத மானியத்தில் விதைகள் கிடைக்கும். வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். வட்டார அலுவலர்கள், உழவர் செயலி மூலம் ஆலோசனைகளை பெற்று, விவசாயிகள் பயன்பெறலாம் என, மாவட்ட வேளாண் இயக்குனர்

சீனிவாசன் தெரிவித்தார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us