ADDED : ஜூலை 25, 2026 05:25 AM

சேலம்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; அதன் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்-கோரி, டில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக, சேலம் அரசு கலைக்-கல்லுாரி வளாகத்தில், இந்திய மாணவர் சங்கம் சார்பில், மாணவர் ரிஷிகுமார் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. அதில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.அதேபோல் சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே, இ.கம்யூ., அலுவலக அறையில், அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர், மாவட்ட செயலர் நேதாஜி தலைமையில் போராட்டம் நடத்தினர். இ.கம்யூ., மாவட்ட செயலர் செல்வ ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்-றனர். தாதகாப்பட்டி கேட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உருவ பொம்மை
நங்கவள்ளி அருகே மேல் வனவாசியில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்-திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவர் பெருமன்ற ஒன்-றிய தலைவர் பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். அதில் மத்திய அமைச்சர்
தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது நங்கவள்ளி போலீசார் தடுத்து, பொம்மையை பறித்துச்சென்றனர். இ.கம்யூ., மாவட்ட துணை செயலர் ஜீவானந்தம் உள்பட பலர்
பங்கேற்றனர்.
