/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துார் புறவழிச்சாலையில் டயர் வெடித்து உருண்ட கார்
/
ஆத்துார் புறவழிச்சாலையில் டயர் வெடித்து உருண்ட கார்
ஆத்துார் புறவழிச்சாலையில் டயர் வெடித்து உருண்ட கார்
ஆத்துார் புறவழிச்சாலையில் டயர் வெடித்து உருண்ட கார்
ADDED : ஆக 29, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் கிருபாகரன், 31. தம்மம்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிகிறார். நேற்று அம்மாபேட்டையில் இருந்து ஆத்துார் புறவழிச்சாலை வழியே, 'டாடா - இண்டிகோ' காரை ஓட்டிச்சென்றறார்.
காலை, 8:00 மணிக்கு தென்னங்குடிபாளையம் பாலம் அருகே சென்றபோது, முன்புற டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவே சென்டர் மீடியனில் மோதியது. தொடர்ந்து கார் உருண்டோடி, மற்றொரு சாலை தடுப்பில் மோதி நின்றது. இதில் படுகாயம் அடைந்த கிருபாகரனை, மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.