/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோலார் வசதியுடன் ஏர்போர்ட்டில் கார் 'ஷெட்'
/
சோலார் வசதியுடன் ஏர்போர்ட்டில் கார் 'ஷெட்'
ADDED : நவ 25, 2024 03:03 AM
ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின் பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்ப-டுகின்றன.
தினமும், 400க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். அவர்கள் வருகை உள்பட, தினமும், 60 முதல், 80 கார்கள் வந்து செல்கின்றன. அதற்கு 'பார்க்கிங்' வசதி உள்ளது. தற்போது நான்கு விமானங்கள் நிறுத்தும் வகையில் விரிவாக்கம் செய்யப்-பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார செலவை குறைக்கும் வகையில், கார் நிறுத்தும் இடங்களில் ெஷட் அமைத்து சோலார் பேனல் அமைக்கப்படவுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து வந்த விமான நிலைய அதிகாரிகள் அளவீடு எடுத்து சென்றுள்ளனர்.
விரைவில் இப்பணி தொடங்கும் என, அதிகாரிகள் தெரிவித்-தனர்.