/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தந்தை, மகனை தாக்கிய வக்கீல் மீது வழக்கு
/
தந்தை, மகனை தாக்கிய வக்கீல் மீது வழக்கு
ADDED : ஆக 18, 2025 03:06 AM
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி, எல்.பி., செட்டி சாலையை சேர்ந்தவர் சுசீந்திரன், 66. புது ஏரிக்கரையை சேர்ந்தவர் கிருபாகரன், 36. இரு-வரும் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளனர்.
நேற்று காலை, 10:15 மணிக்கு, சுசீந்திரன், அவரது மகன் விக்-னேஸ்வரன், 32, என்பவருடன், பைக்கில் புது ஏரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழி-மறித்த கிருபாகரன், 'என் நிலப்பிரச்னைக்கு நீதானே ஆஜரா-கிறாய்' என கேட்டு, தகராறு செய்துள்ளார். மேலும் கல்லால் சுசீந்-திரன் தலையில் தாக்கினார். தடுத்த அவரது மகனும் தாக்குதலில் படுகாயமடைந்தார். இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் புகார்படி,
கன்னங்குறிச்சி போலீசார்
வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

