/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாயை சுட்டு கொன்று மிரட்டியவர் மீது வழக்கு
/
நாயை சுட்டு கொன்று மிரட்டியவர் மீது வழக்கு
ADDED : டிச 25, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜலகண்டாபுரம்:ஜலகண்டாபுரம், சவுரியூரை சேர்ந்த, நெசவு தொழிலாளி சேட்டு, 35. இவரது வீடு அருகே வசிப்பவர் விஜயகாந்த், 25. இவர், 'ஏர் கன்' மூலம், குருவி, புறாக்களை சுட்டு பிடித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, சேட்டு வீட்டின் வெளியே துப்பாக்கி சத்தம் கேட்டது. அவர் சென்று பார்த்தபோது, சேட்டு வளர்க்கும் வளர்ப்பு நாய் இறந்து கிடந்தது.அத்துடன் விஜயகாந்த் சுட்டதும் தெரிந்தது. இதுகுறித்து சேட்டு தட்டிக்கேட்டபோது, 'உன்னையும் சுட்டுடுவேன்' என விஜயகாந்த் மிரட்டியதாக கூறி, ஜலகண்டாபுரம் போலீசில் சேட்டு புகார் அளித்தார். இதனால் போலீசார், நேற்று விஜயகாந்த் மீது வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.------------------

