/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி பள்ளி ஆசிரியர், மனைவி மீது வழக்கு
/
தொழிலதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி பள்ளி ஆசிரியர், மனைவி மீது வழக்கு
தொழிலதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி பள்ளி ஆசிரியர், மனைவி மீது வழக்கு
தொழிலதிபரிடம் ரூ.15 லட்சம் மோசடி பள்ளி ஆசிரியர், மனைவி மீது வழக்கு
ADDED : ஜூன் 03, 2025 01:21 AM
சேலம், மேட்டூர் அருகே ராமன் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 60, தொழிலதிபர். இவர் எஸ்.பி., அலுவலகத்தில் கவுதம் கோயலிடம் மனு வழங்கினார்.
அதில், தன்னிடம் கடந்த, 2015ல் மேட்டூர் புதுச்சாம்பள்ளி தம்பியண்ணன் தெருவில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் ராஜாராம், அவரது மனைவி கவிதா ஆகியோர் நாமக்கல் மாவட்டம், களியனுாரில் தொடங்கப்படும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி, 15 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால் பங்குதாரராக சேர்க்கவில்லை, மோசடி செய்து விட்டனர். பணம் குறித்து கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்' என கூறியிருந்தார்.
இது குறித்து கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர் பிரபா உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தொழிலதிபரை ஐ.டி.ஐ.,யில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து ராஜாராம், கவிதா ஆகியோர் மீது பண மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.