/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பேராசிரியரை செருப்பால் அடித்த வழக்கு; முன்னாள் துணைவேந்தர் ஆஜராக உத்தரவு

ADDED : அக் 09, 2024 06:47 AM
சேலம்: சேலம், பெரியார் பல்கலையில் இயற்பியல் துறை தலைவராக பணிபுரிந்தவர் குமாரதாஸ், 60. இவர், 2017 ஜன., 2ல், அவரது அறையில் இருந்தார். அப்போது அதே துறை பேராசிரியர் அன்பரசன், தகாத வார்த்தையில் திட்டி செருப்பால் அடித்ததாக புகார் எழுந்தது. இதில் குமாரதாஸ் நெஞ்சுவலி ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சூரமங்கலம் உதவி கமிஷனர் வழக்குப்பதிந்தார். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்: 2ல் நடக்கிறது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சம்பவம் நடந்தபோது துணைவேந்தராக இருந்த குழந்தைவேலு, தேர்வாணையர் கதிரவன், வெங்டேஸ்வரன் ஆகியோரை, சாட்சி விசாரணைக்கு வரும், 21ல் ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்ப, மாஜிஸ்திரேட் தினேஷ்குமரன் உத்தரவிட்டார்.