/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவி தற்கொலை முயற்சி டிரைவர் மீது வழக்குப்பதிவு
/
மாணவி தற்கொலை முயற்சி டிரைவர் மீது வழக்குப்பதிவு
ADDED : டிச 15, 2024 01:00 AM
சேலம், டிச. 15-------
மல்லுாரை சேர்ந்தவர் பிரகாஷ், 27. டிரைவரான இவர், பிளஸ், 1 படிக்கும் மாணவியை காதலித்தார். இது மாணவியின் பெற்றோர் வீட்டுக்கு தெரியவர, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி, காதலை கைவிட்டார். தொடர்ந்து காதலித்தபோது ஒன்றாக எடுத்த புகைப்படங்களை, மொபைல் போனில் இருந்து அழித்து
விடும்படி, அவரது தோழி மூலம் பிரகாஷிடம் கூறியுள்ளார். அவர் மறுத்துள்ளார். இதனால் அச்சம் அடைந்த மாணவி, கடந்த, 12ல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் புகார்படி, போக்சோ சட்டத்தில், பிரகாஷ் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து, கொண்டலாம்பட்டி மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.