/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரிய வகை பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தை ஆப்பரேஷனால் குணப்படுத்திய காவேரி மருத்துவமனை
/
அரிய வகை பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தை ஆப்பரேஷனால் குணப்படுத்திய காவேரி மருத்துவமனை
அரிய வகை பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தை ஆப்பரேஷனால் குணப்படுத்திய காவேரி மருத்துவமனை
அரிய வகை பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தை ஆப்பரேஷனால் குணப்படுத்திய காவேரி மருத்துவமனை
ADDED : டிச 22, 2024 12:50 AM
அரிய வகை பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தை
ஆப்பரேஷனால் குணப்படுத்திய காவேரி மருத்துவமனை
சேலம், டிச. 22-
சேலம் காவேரி மருத்துவமனைக்கு, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட, 3 மாத பச்சிளங்குழந்தை அழைத்து வரப்பட்டது. நிமோனியாவாக இருக்கலாம் என, இரு நாட்கள் மருந்துகள் கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மூச்சுத்திணறல் சரியாகாததால் குழந்தை நல மருத்துவர் முகமது பாசில் உள்ளிட்ட அவரது குழுவினர் ஆலோசித்து, சி.டி.ஸ்கேன் எடுத்தனர்.
அதில் குழந்தையின் வயிற்றுப்பகுதி இயல்பு நிலையில் இல்லாமல், இரு நுரையீரல்கள் இடையே அமைந்திருப்பது கண்டறியப்பட்டது. இது அரிய வகை பிரச்னை என கண்டறிந்த மருத்துவ குழுவினர், குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, 4:30 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, குழந்தையின் இரைப்பை சரியான இடத்தில் பொருத்தப்பட்டு, கூடவே குடல் வீக்கத்துக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின், 10 நாட்கள் குழந்தை பாதுகாப்பாக கண்காணிக்கப்பட்டது.
இயல்பான செரிமான செயல்பாடுகளை கண்காணிக்க, குழந்தைக்கு பால் கொடுக்கப்பட்டு ஜீரணத்திறன் பரிசோதிக்கப்பட்டது. பின் நல்ல முறையில், டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டது. சவாலான அறுவை சிகிச்சையை முடித்து குழந்தையை மீட்டெடுத்ததால், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சேலம் நிர்வாக இயக்குனர் செல்வம் கூறுகையில், ''குழந்தைக்கு இதுபோன்ற அரிதான சிகிச்சை செய்வது சவாலான ஒன்று. மருத்துவர்கள் சரவணன், முகமதுபாசில், விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்பட்டு, அறுவை சிகிச்சையை செய்துமுடித்து குழந்தைக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளனர்,'' என்றார்.