ADDED : நவ 19, 2024 01:39 AM
சேலம், நவ. 19-
மருத்துவ துறையில், கதிரியக்கவியல் பிரிவின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையிலும், எக்ஸ் -கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையிலும், நவம்பரில் உலக கதிரியக்க தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள, அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கதிரியக்கவியல் பிரவின் மூலம், கல்லுாரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.துறையின் டீன் பேராசிரியர் டாக்டர். செந்தில்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, இந்த தினத்தை கொண்டாடப்படுவதன் நோக்கம், கதிரியக்கவியலாளர்களின் மருத்துவ பங்களிப்பு, அவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து பேசினார். விம்ஸ் மருத்துவமனை கதிரியக்கவியல் சிகிச்சை பிரிவு ஆலோசகர் டாக்டர்.முரளி கணேஷ், 'கதிரியக்க பாதுகாப்பு' குறித்து பேசினார். விம்ஸ் மருத்துவமனை மூத்த கதிரியக்க சிகிச்சை தொழிற்நுட்பவியலாளர் ஜெயவேல் விழாவில் சிறப்பித்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின், மூத்த தொழிற்நுட்பவியலாளர் சிவரஞ்சன், சேலம் ரேட் க்யூ தொழிற்நுட்ப மேலாளர் பிரகாஷ் ஆகியோர், கதிரியக்க சிகிச்சை உபகரணங்கள் மற்றும் கருவிகள் சார்ந்த செயல்முறை பயிற்சி வழங்கினர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்கள், நோய் கண்டறிதல் பயிற்சி சார்ந்த மையத்தை அமைத்திருந்தனர்.
இதன் முக்கிய நோக்கம் மருத்துவ பயிற்சி தொடர்பான திறன், அனுபவத்தை வழங்குவதேயாகும். ஏற்பாடுகளை கதிரியக்கவியல் பிரிவு பொறுப்பாளர் பேராசிரியை கலைவாணி, உதவி பேராசிரியர்கள் ஆண்டனி ரூபன், அல்போன்ஸ், ஆண்டனி காட்ஸன், தங்க குமரன் மற்றும் நிஷா ஆகியோர் செய்திருந்தனர்.