/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பீஹாரில் பா.ஜ., வெற்றி சேலத்தில் கொண்டாட்டம்
/
பீஹாரில் பா.ஜ., வெற்றி சேலத்தில் கொண்டாட்டம்
ADDED : நவ 15, 2025 01:46 AM
சேலம்: பீஹார் தேர்தல் முடிவு நேற்று வெளியானது. அதில், பா.ஜ., கூட்-டணி அதிக
இடங்களை பிடித்து, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
இதனால் சேலத்தில், மாநகர் மாவட்ட பா.ஜ., சார்பில், அம்-பேத்கர் சிலை அருகே, அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்-டாடினர். மக்கள், பயணியருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார், சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதேபோல் ஆத்துார் பஸ் ஸ்டாண்ட்
பகுதியில், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் கட்சியினர்,
பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சேலம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன் தலை-மையில் கட்சியினர்,
பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டையில்,
பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு
வழங்கினர். மாவட்ட விளையாட்டு
மேம்பாட்டு பிரிவு தலைவர் தமிழ்நேசன்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

