/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மத்திய கலால் வரி ஆபீசில் தீ ஆவணங்கள், கணினி கருகின
/
மத்திய கலால் வரி ஆபீசில் தீ ஆவணங்கள், கணினி கருகின
மத்திய கலால் வரி ஆபீசில் தீ ஆவணங்கள், கணினி கருகின
மத்திய கலால் வரி ஆபீசில் தீ ஆவணங்கள், கணினி கருகின
ADDED : மார் 12, 2024 03:58 AM
சேலம்: சேலத்தில் அணைமேடு பகுதியில், மத்திய கலால் வரி சேலம் மண்டல ஆணையரகம் மற்றும் ஜி.எஸ்.டி., அலுவலகம் செயல்படுகிறது. இங்கு இரண்டாம் தளத்தில் கணக்கு, பணம் செலுத்தும் பிரிவு உள்ளது. அங்கிருந்த ஏ.சி.,மெஷினில் இருந்து நேற்று மாலை கரும்புகை வெளியேறி, சில வினாடிகளில் எரியத் தொடங்கியது.
அலுவலக ஊழியர்கள் தகவலின்படி, செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தில் கணக்கு பிரிவில் இருந்த பிரதான ஆவணங்கள், தஸ்தாவேஜூகள், கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து விட்டன.
அஸ்தம்பட்டி போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர். மின் கசிவால் தீ விபத்து நடந்ததா அல்லது ஏ.சி.,மெஷின் பழுதால் தீப்பிடித்ததா? என்ற கோணத்தில், போலீஸ் விசாரணை நடக்கிறது.