/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சி பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு பணி
/
மாநகராட்சி பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு பணி
ADDED : அக் 24, 2024 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி யில், முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு, எஸ்.கே.சி. சாலையில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். மாணவ--மாணவிகளுக்கு பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியின் தரம், பள்ளி வளாகம், வகுப்பறைகள் பராமரிக்கப்படும் விதம் குறித்து பார்-வையிட்டார்.
மேலும், புதிய பாரத எழுத்தறிவு திட்ட வகுப்ப-றையை பார்வையிட்டார். பள்ளி மாணவ, -மாணவிகளுக்கான ஆதார் மேம்படுத்தும் முகாமையும் ஆய்வு செய்தார். ஆய்வின்-போது, பள்ளி தலைமையாசிரியை சுமதி மற்றும் ஆசிரியைகள் உடன் இருந்தனர்.