/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீச்சல் பயிற்சி முடித்த 62 பேருக்கு சான்றிதழ்
/
நீச்சல் பயிற்சி முடித்த 62 பேருக்கு சான்றிதழ்
ADDED : ஏப் 28, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சேலம் காந்தி மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில், முதல்கட்ட பயிற்சி முகாம் கடந்த, 1ல் தொடங்கி, 15 வரை நடந்தது.
2ம் கட்ட பயிற்சி, 15ல் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. முதல்கட்ட பயிற்சியில், 30 பேரும், இரண்டாம் கட்ட பயிற்சியில், 32 பேர் பங்கேற்றனர். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. பயிற்சியாளர் மகேந்திரன் தலைமை வகித்து, 62 பேருக்கு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து, 3ம் கட்ட பயிற்சி, நாளை தொடங்க உள்ளது. அதேபோல், 4ம் கட்ட பயிற்சி, மே, 13, ஐந்தாம் கட்ட பயிற்சி, மே, 27ல் தொடங்கும் என, பயிற்சியாளர் தெரிவித்தார்.

