ADDED : மே 17, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதற்கு நெருஞ்சிப்பேட்டை கதவணை ஷட்டர்கள் மூலம் அடைக்கப்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று கதவணை ஷட்டர் சீரமைப்புக்கு, தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் திறந்து விடப்பட்டது. வரும், 25 வரை ஷட்டர் பராமரிப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே நெருஞ்சிப்பேட்டைக்கு செல்ல விசைப்படகு போக்குவரத்து இயக்கப்படும். தற்போது கதவணையில் தண்ணீர் திறப்பால், விசைப்படகு போக்குவரத்து, 10 நாட்கள் இருக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலரும், இது தெரியாமல் அங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

