/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் கோப்பை கிரிக்கெட்: க.நா.பட்டி பள்ளி அசத்தல்
/
முதல்வர் கோப்பை கிரிக்கெட்: க.நா.பட்டி பள்ளி அசத்தல்
முதல்வர் கோப்பை கிரிக்கெட்: க.நா.பட்டி பள்ளி அசத்தல்
முதல்வர் கோப்பை கிரிக்கெட்: க.நா.பட்டி பள்ளி அசத்தல்
ADDED : செப் 13, 2024 07:12 AM
ஓமலுார்: சேலம் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி கடந்த, 10ல் காந்தி மைதானத்தில் தொடங்கியது. அதில் கருப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அதில், 80 அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில், 5 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது.
3ம் நாளான நேற்று இறுதி போட்டி நடந்தது. அதில் கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி(பிளஸ் 2) முதலிடம், முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி(10ம் வகுப்பு) அணி மூன்றாமிடம் பிடித்தன. இதனால் கஞ்சநாயக்கன்பட்டி பள்ளி மாணவர்களை, அதன் தலைமை ஆசிரியர் சேகர், உடற்கல்வி ஆசிரியர் புகழேந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.