ADDED : நவ 14, 2026 04:20 AM
ஓமலுார்; ஓமலுார், காமாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, தமிழக மகளிர் மேம்பாடு நிறுவன மேலாண் இயக்குனர் ஆர்த்தி, மாணவ, மாணவியருக்கு கேக், முதல்வர் விஜய் புகைப்படம் அச்சிட்ட வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.
தொடர்ந்து ஓமலுார் பாத்திமா மகளிர் பள்ளியில், மாணவியருக்கு கண்காணிப்பு அலுவலர் கேக் வழங்க, கலெக்டர் இளம் பகவத், வாழ்த்து அட்டைகளை வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சங்ககிரி, தேவண்ணகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் முருகன்(பொ), குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு கேக், வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.
அதேபோல் தாரமங்கலம், ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு, கேக், வாழ்த்து அட்டை வழங்கப்பட்டன.
