ADDED : நவ 14, 2026 04:19 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி,: பனமரத்துப்பட்டி, களரம்பட்டியில் அண்ணாமலையார் கோவில் அருகே சர்வ சித்தி விநாயகர் கோவில் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு, பக்தர்கள் வழிபட்டனர்.
நேற்று காலை, ராகு, கேது சிலை இருந்த, விநாயகர் கற்சிலையை காணவில்லை. அதிகாலையில் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
