/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சமாதான இல்லம் சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
/
சமாதான இல்லம் சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ADDED : டிச 28, 2025 08:09 AM

சேலம்: -சேலம், வசந்தபுரம், இந்திய கிறிஸ்தவ சேவை நிலைய, சமாதான இல்லம் சார்பில் கிறிஸ்-துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் பலர், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஊர்வலத்தை, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்திய கிறிஸ்தவ சேவை நிலைய நிறுவனர் ஜெயராஜ் கிருஷ்ணன், ஜெபம் செய்தார். மகேந்த-ரபுரி செயின்ட் பேசில் மெட்ரிக்குலேஷன் பள்-ளியில் தொடங்கிய ஊர்வலம், ஏற்காடு பிரதான சாலை வழியே, அஸ்தம்பட்டி ரவுண்டானா, மணக்காடு வந்து, மீண்டும் பள்ளியை அடைந்-தது. அனைத்து கல்வி நிலைய ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, சமாதான இல்ல தாளாளர் ஜெய-சீலி கிறிஸ்டி, இயக்குனர்கள் நீவா லில்லி எஸ்தர், வீரராகவன், பேசில் பிரைட், ஜாய் பிரைட், டேவிட் லிவிங்ஸ்டன், சேவை நிலைய பணியாளர்கள் செய்திருந்தனர்.

