ADDED : ஜூன் 01, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், அம்மாபேட்டை, பச்சப்பட்டியில் உள்ள விநாயகர் கோவிலில், நேற்று காலை பக்தர்கள் வந்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. தொடர்ந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டதில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் வந்து,
கோவிலுக்குள் கையை நீட்டி, பொருட்களை திருட முயன்றது பதிவாகி இருந்தது. கைக்கு எட்டாததால், அவர் திரும்பி சென்றுள்ளார். 'மது'போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து மக்கள் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.