/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சி.ஐ.டி.யு., அரசு போக்குவரத்து தொழிலாளர் உண்ணாவிரதம்
/
சி.ஐ.டி.யு., அரசு போக்குவரத்து தொழிலாளர் உண்ணாவிரதம்
சி.ஐ.டி.யு., அரசு போக்குவரத்து தொழிலாளர் உண்ணாவிரதம்
சி.ஐ.டி.யு., அரசு போக்குவரத்து தொழிலாளர் உண்ணாவிரதம்
ADDED : ஜூன் 25, 2024 01:56 AM
சேலம்: சேலம் அஸ்தம்பட்டி, அரசு விரைவு போக்குவரத்து பனிமனை முன்பாக, சி.ஐ.டி.யு., தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
செயலர் லியாகத் அலி தலைமை வகித்தார். போக்குவரத்து துறையில் ஏற்படும் கூடுதல் செலவினத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிட வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் காலிப்பணியிடத்தை நிரப்புதல், 110 மாத பஞ்சப்படி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்குதல், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பேசி முடிக்க வேண்டும். டிக்கெட் மெஷின் குளறுபடிகளை நீக்குதல், பேட்டா படிகளை தன்னிச்சையாக குறைப்பதை நிறுத்த வேண்டும். தினக்கூலி, 835 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் தியாகராஜன், மாநில குழு உறுப்பினர் வெங்கடபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, புது பஸ்ஸ்டாண்ட் மெய்யனுார் கிளை முன்புறம் உண்ணாவிரதம் நடந்தது.