/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதல்வர் கோப்பை 2ம் இடத்தில் சேலம்
/
முதல்வர் கோப்பை 2ம் இடத்தில் சேலம்
ADDED : அக் 14, 2024 04:56 AM
சேலம்: சேலத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி கடந்த மாதம் நடந்தது. பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளி, மக்கள், அரசு ஊழியர் என, 5 பிரிவுகளில், 27 விளையாட்டுகள், 53 வகைகளில் நடத்தப்பட்டன.
மாவட்ட அளவில் வெற்றி பெற்றோர் மண்டல போட்டிக்கும், அடுத்து மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். கடந்த, 4 முதல் இறு-திப்போட்டிகள் சென்னை உள்பட, 4 நகரங்களில் நடந்து வருகி-றது. இதில் சென்னை, சேலம் உள்பட, 29 மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னை, 25 தங்கம், 17 வெள்ளி, 21 வெண்கலம் என, 63 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்-ளது சேலம், 10 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என, 19 பதக்-கங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த விளை-யாட்டு போட்டி கள் வரும், 24 வரை நடக்க உள்ளது.