/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சமையலறையில் இருந்த நாகப்பாம்பு மீட்பு
/
சமையலறையில் இருந்த நாகப்பாம்பு மீட்பு
ADDED : அக் 06, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: வீட்டு சமையல் அறையில் இருந்த நாகப் பாம்பை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். தலைவாசல் அருகே, சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் ஈஸ்வரன், 40. இவரது வீட்டினுள் நேற்று, பாம்பு இருப்பதாக ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு மாலை, 4:00 மணிக்கு தகவல் அளித்தனர்.
உடனே சென்ற தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன், சமையல் அறையினுள் இருந்த ஐந்து அடி நீளம் கொண்ட நாகப் பாம்பை மீட்டனர். பின்னர், ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.