ADDED : ஜூலை 18, 2026 06:04 AM
சேலம்: ஆடி பிறப்பை ஒட்டி, சேலத்தில் நேற்று மக்கள், ஆர்வத்துடன் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர். முன்-னதாக தேங்காயை தரையில் தேய்த்து அதி-லுள்ள, 3 கண்களில் ஒன்றில் துளையிட்டு நீரை வெளியேற்றி அதற்குள் பச்சரிசி, தானியங்கள், வெல்லம், பொட்டுக்கடலை, அவல், எள் உள்-ளிட்டவற்றை போட்டு, மஞ்சள் பூசி அழிஞ்சி குச்-சியில் சொருகி, தீயில் சுட்டனர்.
அந்த தேங்-காயை சுவாமிக்கு படைத்து வழிபட்டு, பின் சுட்ட தேங்காயை அருகில் உள்ளவர்களுக்கு வழங்-கினர். அதேபோல் புது மண தம்பதியர், வெகு விமரிசையாக கொண்டாடினர். குறிப்பாக பெண் வீட்டினர் ஆடிக்கு அழைத்து புத்தாடை, இனிப்பு வழங்கினர். அதேபோல் இடைப்பாடி, ஆத்துார், தாரமங்கலம் உள்பட மாவட்டம் முழுதும், ஏராளமான பெண்கள், சிறுவர், சிறுமியர், தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர்.
ஆடிப்பிறப்பு வெள்ளியன்று வந்ததால், சேலம், வ.உ.சி., மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களை-கட்டியது. ஒரு கிலோ குண்டுமல்லி, ஜாதிமல்லி தலா, 500, முல்லை, 280, காக்கட்டான், 200, அரளி, 140, வெள்ளை அரளி, 160 ரூபாய் என, விலை அதிகரித்திருந்தபோதும், பூக்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், வியாபா-ரிகள் தேங்காய், அழிஞ்சி குச்சிகளை குவித்து
விற்பனையில் ஈடுபட்டனர். ஒரு தேங்காய் அள-வுக்கேற்ப, 20 முதல், 30 ரூபாய் வரையும், அழிஞ்சி குச்சி, 15 முதல், 30 ரூபாய் வரையும்
விற்பனையானது.
