/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவை - தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்
/
கோவை - தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்
ADDED : ஜூலை 15, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், இன்று கோவை-தன்பாத் வார ரயில், 8 மணி நேரம் தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே இயக்கப்படும், கோவை-தன்பாத் சிறப்பு வார ரயில், இன்று காலை 7:50 மணிக்கு பதில், 8 மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக, மாலை 4:15 மணிக்கு கிளம்பும். மறு மார்க்க ரயில் தாமதமாக வருவதே, இம்மாற்றத்துக்கு காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.