/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐந்தாவது வாரமாக 8 மணி நேரம் தாமதம் கோவை-தன்பாத் ரயில் பயணிகள் அவதி
/
ஐந்தாவது வாரமாக 8 மணி நேரம் தாமதம் கோவை-தன்பாத் ரயில் பயணிகள் அவதி
ஐந்தாவது வாரமாக 8 மணி நேரம் தாமதம் கோவை-தன்பாத் ரயில் பயணிகள் அவதி
ஐந்தாவது வாரமாக 8 மணி நேரம் தாமதம் கோவை-தன்பாத் ரயில் பயணிகள் அவதி
ADDED : ஜூலை 29, 2025 02:03 AM
சேலம், தொடர்ந்து ஐந்தாவது வாரமாக இன்றும் (29ம் தேதி), கோவை-தன்பாத் வார ரயில், 8 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை-தன்பாத் வார ரயில், கோவையிலிருந்து செவ்வாய்தோறும் காலை 7:50 மணிக்கு கிளம்பி, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே வியாழன் மதியம் 1:00 மணிக்கு, தன்பாத் சென்றடையும். 2,983 கி.மீ., துாரம் செல்லும் இந்த ரயில், கடந்த சில வாரங்களாக, 8 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக கிளம்பி வருகிறது.
கடந்த ஜூன் 23ம் தேதியிலிருந்து தொடர்ந்து நான்கு வாரங்களாக காலை, 7:50 மணிக்கு பதில், 8 மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக மாலை, 4:15 மணிக்கு கிளம்பியது. ஐந்தாவது வாரமாக, இன்றும் மாலை, 4:15 மணிக்கு தாமதமாக கிளம்பும் என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. தொடர்ந்து ஐந்து வாரங்களாக, 8 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக இயக்கப்படுவதால், இந்த ரயிலில் முன்பதிவு செய்யும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.
வணிக ரீதியாக, வட மாநிலங்களில் பல முக்கிய ஊர்களை இணைக்கும் இந்த ரயிலை, உரிய நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.