/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் குளிர், பனியால் 'ஜில்ஜில்'
/
ஏற்காட்டில் குளிர், பனியால் 'ஜில்ஜில்'
ADDED : டிச 17, 2025 07:40 AM

ஏற்காடு: ஏற்காட்டில் கடுங்குளிருடன் பனிமூட் டம் சூழ்ந்ததால், 'ஜில்ஜில்' என மாறியது.
ஏற்காட்டில் சில நாட்களாகவே குளிர் அதிகளவில் காணப்படுகி-றது. நேற்று முன்தினம் அதிகாலை முதல், 10.6 டிகிரி குளிர் இருந்தது. உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்-டது. நேற்று காலை முதலும், கடுங்குளிருடன் பனிமூட்டம் சூழ்ந்தது. 5 அடி துாரத்
தில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டதால், வாகன ஓட்டிகளால் மிகவும் மெதுவாகவே ஓட்டிச்செல்ல முடிந்-தது.
படகு இல்ல ஏரியை சூழ்ந்த பனிமூட்டத்தால், படகுகளை இயக்-குவதில் சிரமம் ஏற்பட்டது. சுற்றுலா பயணியரே ஓட்டிச்செல்லும் பெடல் படகு இயக்கத்தை நிறுத்திவிட்டனர். பின் படகு இல்ல பணியாளர்கள் ஓட்டும் மோட்டார், துடுப்பு படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. அதில் குறைந்த அளவில் சுற்றுலா பயணியர், கடுங்குளிர், பனிமூட்டத்துக்கு இடையே படகு சவாரி செய்து, வித்தியாசமான சூழலை இதமாக ரசித்தனர். மாலை, 4:30 மணிக்கு பனிமூட்டம் அதிகரித்து சாரல் மழையும் பெய்தது. இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து, அதன் அளவு, 10 டிகிரி செல்சியசுக்கு கீழ் குறைந்தது. உள்ளூர் மக்கள், வேறு வழி-யின்றி வீடுகளில் முடங்கினர்.
அதேபோல் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தி-யாப்பட்டணம், காரிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம், 2:00 மணிக்கு கருமேகம் சூழ்ந்து, கடுங்குளி-ருடன் லேசான மழை பெய்தது. இதனால் வானம் இருண்ட நிலையில் குளிர்ந்த சூழல் நிலவியது.

