/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அதிக லாபத்துக்கு சொட்டு நீர் பாசன திட்டம்விவசாயிகள் பயன்படுத்த கலெக்டர் அறிவுரை
/
அதிக லாபத்துக்கு சொட்டு நீர் பாசன திட்டம்விவசாயிகள் பயன்படுத்த கலெக்டர் அறிவுரை
அதிக லாபத்துக்கு சொட்டு நீர் பாசன திட்டம்விவசாயிகள் பயன்படுத்த கலெக்டர் அறிவுரை
அதிக லாபத்துக்கு சொட்டு நீர் பாசன திட்டம்விவசாயிகள் பயன்படுத்த கலெக்டர் அறிவுரை
ADDED : ஏப் 26, 2025 01:40 AM
சேலம்:சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:
நவப்பட்டி நாகராஜன்: கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை போகும்வரை, மேட்டூர் அணை வலது, இடது கரையில் தண்ணீர் திறக்க வேண்டும். அது பாசன வசதிக்கு உதவியாக இருக்கும்.
காமநாயக்கன்பாளையம் இருசப்பன்: மக்காச்சோள பயிருக்கு காப்பீடு தொகையை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும். கூடமலை சின்னசாமி: நெல் குடோனுக்கு விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.
தொடர்ந்து தாரமங்கலம், பவளத்தானுார் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து, கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் யுரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் என, 16,959 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நெல், சிறுதானிய விதைகள், விதை பயறு வகைகள், எண்ணெய் வித்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கோடைகாலம் என்பதால் விவசாயிகள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதிக லாபம் பெற, சொட்டு நீர் பாசனம் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயிருக்கு தேவையான நீர், உரம் போன்றவை, பயிரின் வேருக்கு அருகில் கிடைப்பதால், பயிரின் வளர்ச்சி சீராக இருப்பதோடு மகசூலும் அதிகளவு கிடைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக தென்னை, பாக்குகளில் ஏற்படும் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ரவிக்குமார், வேளாண் இணை இயக்குனர் சிங்காரம், அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.