/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செந்தில் பள்ளி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
/
செந்தில் பள்ளி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : பிப் 23, 2024 02:04 AM
சேலம்;ஜே.இ.இ., முதல் கட்ட தேர்வு ஜனவரி இறுதியில் நடந்தது.
2ம் கட்ட தேர்வு ஏப்ரலில் நடக்க உள்ள நிலையில், கடந்த வாரம் முதல் கட்ட தேர்வு முடிவு வெளியானது.அதில் சேலம், செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர். அத்தேர்வை எழுதிய, 73 மாணவர்களில், 34 பேர், 90 பர்சன்டெயிலுக்கு மேல் பெற்றுள்ளனர்.குறிப்பாக பிளஸ் 2 மாணவர் பிரசன்னா, 99.80 பர்சன்டெயில்(இயற்பியல் - 100/100) பெற்று சாதனை படைத்தார். அவரை, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, முதன்மை கல்வி அலுவலர் கபீர், பள்ளி முதல்வர் முனைவர் மனோகரன், பொன்னாடை அணிவித்து பாராட்டினர். பிரசன்னாவின் தாய் கிருஷ்ணப்ரியா உடனிருந்தார். மேலும் முதல் கட்ட தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்கள், பள்ளி நேரத்திலேயே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துடன், நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.