/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாயிகள் மனுக்களுக்கு தனி கவனம் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
/
விவசாயிகள் மனுக்களுக்கு தனி கவனம் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
விவசாயிகள் மனுக்களுக்கு தனி கவனம் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
விவசாயிகள் மனுக்களுக்கு தனி கவனம் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
ADDED : ஆக 23, 2025 01:57 AM
சேலம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் ஏராளமான விவசாயிகள், கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.
தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் வேளாண் சாகுபடியை பொறுத்தவரை நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக் கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள், 75,261 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில், தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
குறுகிய கால கடன், மத்திய கால முதலீட்டு வேளாண் கடன்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டது குறித்தும், மல்பெரி சாகுபடி, பட்டுக்கூடு அறுவடை குறித்து, தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விரைவாக அடைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு, தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து, நல்ல முறையில் பயன்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பிரகாசம், உள்ளிட்ட அலுவர்கள் பங்கேற்றனர்.