ADDED : டிச 10, 2025 09:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனுார் ஊராட்சியில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முதல் நத்-தமேடு வரை, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
அப்ப-ணியை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று பார்-வையிட்டார். குறிப்பாக சாலையை தோண்டி நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை கணக்கீடு செய்து பார்த்தார். தொடர்ந்து சந்தியூர் ஆட்டையாம்பட்-டியில் அரசு நடுநிலைப்பள்ளி கட்டுமான பணி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் மழை நீர் வடிகால் கட்டும் பணி, நிலவாரப்பட்டியில் ரேஷன் கடை, சிறு-பாலம் கட்டும் பணிளை பார்வையிட்டார்.
அப்போது பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகளை அறிவுறுத்தினார். பனமரத்துப்பட்டி பி.டி.ஓ., கார்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

