/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் நாளை முதல் கணினி முன்பதிவு
/
சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் நாளை முதல் கணினி முன்பதிவு
சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் நாளை முதல் கணினி முன்பதிவு
சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் நாளை முதல் கணினி முன்பதிவு
ADDED : மே 21, 2025 01:44 AM
சேலம், சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில், நாளை (மே 22) முதல் கணினி முன்பதிவு மையம் செயல்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷன், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ரூ.8 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் புதிய நடைமேடை, முகப்பு கட்டடம், லிப்ட் வசதி, காத்திருப்பு வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி உள்ளிட்ட பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த ரயில்வே ஸ்டேஷனை பிரதமர் நரேந்திரமோடி, காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார். மேம்பாட்டு பணிகளில் ஒன்றாக கணினி முன்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகள் மட்டுமே, இந்த ஸ்டேஷனில் வழங்கப்பட்டது. தற்போது அமைக்கப்பட்டுள்ள முன்பதிவு மையம் மூலம் காலை, 8:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை அனைத்து பகுதிகளுக்கும் பயணிகள் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.