/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியின்றி பேனர் வியாபாரிகள் கவலை
/
அனுமதியின்றி பேனர் வியாபாரிகள் கவலை
ADDED : நவ 25, 2024 02:56 AM
மல்லுார்: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், மல்லுார் டவுன் பஞ்சாயத்து உள்ளது. அங்கு, இரு பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. அப்பகுதியில் ஜவுளி கடை, ஓட்டல், காபி பார், மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.
இதுகுறித்து கடைக்காரர்கள் கூறியதாவது: கடைகளை மறைத்து சாலையோரம் பேனர் வைப்பதால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மக்கள் கடைக்கு வரவே சிரமப்படுகின்றனர். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. பேனரை பார்த்தபடி இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று விபத்தில் சிக்குகின்றனர். அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள், நிகழ்ச்சி முடிந்த பின்னும் எடுப்பதில்லை. சேலம் பஸ் ஸ்டாப் எதிரே, நிரந்தர பேனர் வைக்கும் இடமாக மாறியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.