/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'காங்., - தி.மு.க., கூட்டணி தொடரும்'
/
'காங்., - தி.மு.க., கூட்டணி தொடரும்'
ADDED : அக் 28, 2024 04:41 AM
இடைப்பாடி: கன்னியாகுமரி எம்.பி., விஜய்வசந்த், சேலம் மாவட்டம், இடைப்பாடியில் உள்ள காமராஜர், காந்தி சிலைகளுக்கு, நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., - காங்., கூட்டணி வலுவாக உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், 40க்கு, 40 என, அனைத்து தொகுதி-களையும் கைப்பற்றினோம். அதனால், 2026 சட்டசபை தேர்த-லிலும் இந்த கூட்டணி தொடரும். தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் மேற்கு மாவட்ட செயலர் ஜெயக்குமார், மாவட்ட முன்னாள் தலைவர் கோபால், நகர தலைவர் நாகராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.

